75 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம்
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு 20அ அனுமதியின் கீழ் பெற்றுக் கொள்ளப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் காணி உத்தியோகஸ்தர் எம்.ஏ.எம்.றாபி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் கலந்துகொண்டார். கௌரவ அதிதிகளாக கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சா உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் 65 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் பிரதம மற்றும் கௌரவ அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்திற்கான மாகாண பொலிஸ் ஆணைக்குழு பிரேரணை
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்திற்கான மாகாண பொலிஸ் ஆணைக்குழு அமைப்பது தொடர் பிலான பிரேரணையை நிறைவேற்றுவதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகிறது. இது தொடர்பான பிரேரணையயான்று கிழக்கு மாகாண சபையில் விரைவில் நிறைவேற்றப் பட்டு மாகாண ஆளுநர் ஊடாக அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழுவிற்கு மாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைவராகச் செயற்படு வார். ஜனாதிபதி மற்றும் மாகாண முதலமைச்சர் ஆகியோரால் தலா ஒருவர் இந்த ஆணைக் குழுவிற்கு உறுப்பினர்களாக நியமிக்கப்படு வார். இந்த மாகாண பொலிஸ் ஆணைக்குழு மாகாணத்திலுள்ள பொலிஸாரின் இடமாற் றங்கள், பதிவியுயர்வுகள், ஒழுக்காற்றுக் கட்டுப் பாடுகள் போன்றவற்றிற்கு பொறுப்பாகச் செயற்படும். பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அவை இதுவரை வழங்கப்படவில்லை.
தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது.
எமது சம்மாந்துறைப் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்கும் தேர்தல் பிரச்சாரங்கள் தற்பொழுது சூடு பிடித்துள்ளது. தற்பொழுது எமது ஊரில் பிரதான கட்சிகளில் மூன்றான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மும்முனைப் போட்டியானது சூடு பிடித்துள்ளது. இம்முறை தேர்தல் மிகப் பலமானதொரு களமாகவே அமையவுள்ளது என்பதில் ஐயமில்லை.
நீதவான் நீதிமன்றமும், இலங்கையின் முதலாவது குவாசி மன்றமும் திறந்து வைப்பு
சம்மாந்துறையில் இன்று பொன்னாளாகவே கருதலாம். இன்று இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. எமது சம்மாந்துறை பிரதேசத்தில் இதுவரை காலமும் அதாவாது நீதவான் நீதிமன்றம் இன்று நிரந்தரமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையிலே முதல் முறையாக சம்மாந்துறையிலேயே குவாசி நீதிமன்றத்திற்கு என்று நீதிமன்றத்திறகான நிர்வாக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரதம அதிதியாக பிரதம நீதியரசர் அசோகடி சில்வா மற்றும் நீதியமைசர் அல்ஹாஜ் றவூப் ஹக்கீம், மற்றும் மேல் நீதிமன்ற நீதியரசர் நபா தாஹீர், மாவட்ட ந்திமன்ற நீதிபதி இள்ஞ்செலியன் மற்றும் பிரதேசசெயலாலர், பிரதேச சபை உறுப்பினர்க்கள், சட்டத்தரணிகள், பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
எமது இணையத்தளமானது 100000 வாசகர்களைக் கடந்துள்ளது
எமது இணையத்தளமானது உருவாக்கப்பட்டு 06 மாத காலத்தினுள் 100000 வாசகர்களை கடந்துள்ளது இன்றுடன். இவ்வாறு எமது இணையத்தளமானது குறுகிய காலத்தினுள் அடைந்துள்ள வளர்ச்சியானது அபரிதமானது. இவ்வாறு எமது இணையத்தளமானது தொடர்ந்து பல சாதனைகள் படைக்கும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் களமிறங்குகின்றது. வாசகர்களாகிய நீங்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்க வேண்டும் என்க் கேட்டுக் கொள்கின்றோம்.