பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்திற்கான மாகாண பொலிஸ் ஆணைக்குழு அமைப்பது தொடர் பிலான பிரேரணையை நிறைவேற்றுவதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகிறது. இது தொடர்பான பிரேரணையயான்று கிழக்கு மாகாண சபையில் விரைவில் நிறைவேற்றப் பட்டு மாகாண ஆளுநர் ஊடாக அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழுவிற்கு மாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைவராகச் செயற்படு வார். ஜனாதிபதி மற்றும் மாகாண முதலமைச்சர் ஆகியோரால் தலா ஒருவர் இந்த ஆணைக் குழுவிற்கு உறுப்பினர்களாக நியமிக்கப்படு வார். இந்த மாகாண பொலிஸ் ஆணைக்குழு மாகாணத்திலுள்ள பொலிஸாரின் இடமாற் றங்கள், பதிவியுயர்வுகள், ஒழுக்காற்றுக் கட்டுப் பாடுகள் போன்றவற்றிற்கு பொறுப்பாகச் செயற்படும். பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அவை இதுவரை வழங்கப்படவில்லை.
கிழக்கு மாகாணத்திற்கான மாகாண பொலிஸ் ஆணைக்குழு பிரேரணை
Posted by
News of Sammanthurai
Wednesday, February 23, 2011
0 comments: