சோட்டோகன் கராதே தோ கென்சின்காய்அசோசியேசனின் கிழக்கு மாகாணக் கிழையின் 11வது ஆண்டு நிறைவை முன்னிட்டு(18.09.2010) சனிக் கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில்மாபெரும் கராட்டி சுற்றுப் போட்டி ஒன்று இடம்பெற்றது. இதில் பலஅமைப்புக்களையும் பல கழகங்களையும் சேர்ந்த போட்டியாளர்கள் போட்டியிட்டனர். இப்போட்டிகள் வயது அடிப்படையிலும் நிறை அடிப்படையிலும் இடம் பெற்றது.
 இதில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்ஹக்கீம் அவர்களும், மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும், மற்றும்பலபிரமுவர்களும் கலந்துகொண்டனர்.
கீழே படத்தில் போட்டியாளர்கள் போட்டியிடுவதையும், இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிதிகளினால் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படுவதையும்,சோட்டோகன் கராதே தோ கென்சின்காய் அசோசியேசனின் கிழக்குப் பிரதிநிதிSensie.A.R.M.இக்பால் அவர்களால் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு நினைவுக் கேடயம் வழங்கப்படுவதையும் ரவூப் ஹக்கீம் அவர்களால் சம்மாந்துறைப் பிரதேசசபைத் தவிசாளர் M.I.M.மன்சூர் அவர்களுக்கு நினைவுக் கேடயம் வழங்கப்படுவதையும் படத்தில் காணலாம்.

0 comments:

Post a Comment

About Me

News of Sammanthurai
View my complete profile