M.I.M.MAJEED (M.D) |
எமது ஊரின் தலை சிறந்த எஞ்சினியரிங் வேர்க் சொப்பான ஹிலால் எஞ்சினியரிங் வேர்க் சொப் நிருவனத்தினர் தமது உற்பத்திகளின் மற்றுமோர் வெற்றிப் பாதையின் மற்றுமோர் இலக்கை எட்டியுள்ளனர்.இவர்களது நெசவுத் தொழிலில் பயனபடும் நூல் சுற்றும் எந்திர உற்பத்தியானது உலகளவில் போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.ஏனெனில் இவ் இயந்திரத்தை இந்தியா மற்றும் சைனா போன்ற நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட பிரயத்தனங்கள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.எனினும் எமது மண்ணில் பிறந்த ஹிப்கோ அச்சகம்,ஹிலால் எஞ்சினியரிங் வேர்க் சொப் நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர் அல்ஹாஜ்-M.I.M.மஜீத் அவர்களின் அயராத முயற்ச்சியின் பயனாகவே இன்று ஓர் உலகப் புகழுக்குரிய உற்பத்தியை உருவாக்கி எம் ஊருக்கு பெருமை சேர்த்துள்ளது.இவ்வாறான உற்பத்திகளை உருவாக்கும் உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் மற்றும் மக்களாகிய நாம் அனைவரும் ஊக்கம் அளிக்க வேண்டும் என எமது செய்திப் பிரிவு கேட்டுக் கொள்கிறது.மேலும் இவ் இயந்திர உற்பத்தியாளர் ஓர் சிறந்த சிக்கனப் பொருள் உற்பத்தியாளர் கூட.இவர் மின்சாரனம் இன்றி விறகினால் குறைந்த விறகுச் செலவுடன் oven ஒன்றினைக் கூட உருவாக்கியுள்ளார்.
.மேலும் எமது ஊரின் கண்டுபிடிப்பாளர் அவருடைய இவ் உற்பத்தியில் உதவிய அனைவருகும் நன்றியைத் தெரிவித்தார்.. குறிப்பாக ஆசிக் (ஹிப்கோ) அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.இவற்றின் புகைப்படங்களானது கீழே இணைக்கப்பட்டுள்ளது.எனவே இவ்வாறான ஓர் ஆக்க பூர்வமான ஓர் உற்பத்தியாளரை எமது ஊரான சம்மாந்துறை கொண்டுள்ளதையிட்டு பெருமையடைகிறது.இவருடன் நீங்கள் தொடர்பு கொள்ள-0772301817,0672260326
0 comments: