2010 ஆகஸ்ட் 31ம் திகதி க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் முடிவுடன் உருவானது இவ்விணையம். இதற்கு வித்திட்டனர் பர்ஹான் மற்றும் பிறோஸ். எமது ஊருக்கான பல நாள் எட்டாக் கனியாகவே இருந்த ஊர்ச் செய்திகளைக் காவும் ஓர் ஊடகம் அது நனவாகியது எமது துடிப்பான இணையச் சமூகமான தில்ஸாத்,றிபாஸ் ,இஹ்ஸான்,ஆசிக் ஆகியோரின் ஆரம்ப இயக்கத்தினால் பின் SYDAஅமைப்பின் அனுசரனையுடன் நிப்றாஸ் மற்றும் தன்வீர் போன்றோர் எமது எழுத்தாளர் குழுக்கு வலுச் சேர்த்தனர்.. எமக்கு அக்கால கட்டத்தில் ஊடகம் பற்றிய அறிவோ, அனுபவமோ கிடையாது எமக்கு என ஒரு ஊடகப் பாணி உருவாக்கப்பட்டு 37 வாசகருடன் முதல் நாள் ஊடக பிரவேசம் உலக வலைத் தளத்திற்கு அரங்கேறியது. அடிப்படை வளம் கூட இல்லாமல் உருவான எமது இணையம் புகைப்படம் எடுப்பதற்கு ஒரு கமெரா இன்றி வாடகைக்கு ஒரு கைத்தொலைபேசியுடன் காலை சென்று மாலை திரும்பும் ஊர் சுற்றியாக வலம் வந்தோம். புகைப்படம் எடுப்பதற்காக வீதி வீதியாக நாம் சென்று அனுமதி கேட்டால் எமக்கு கிடைக்கும் பதில்கள் இல்லை மற்றும் அவமானம், பெண்களை புகைப்படம் எடுக்க வந்தவர்கள், வேலையற்றவகள். பொதுச் சேவை என்று வந்தால் இவை தூசுகளே தட்டி விட்டே சென்றோம். பின் ஏதோ சில நல்லுள்ளம் மற்றும் ஒரு தனிப்பட்ட நபரான மாஹிர் என்ற சகோதரரின் முழுமையான ஆதரவும் வழிகாட்டலுமே எம்மை இவ்விடத்திற்கு அதாவது 45000 வாசகர்களை எட்ட வைத்துள்ளது வெறும் 4 மாத காலத்தினுள்.


இவ்வாறு எமது இணையத்தளம் போடும் நடையில் சோதனை நிறைந்ததும் வெற்றி போடும் காலமும் இதுவே. இக்கால கட்டத்தில் எமது கசப்பான நினைவுகளாக பெயர்ப்பலகை கிழிக்கப்பட்டது, வதந்திகள் பரப்பப் பட்டமை எம்மை அவமானப்படுத்தியமை இன்னும் பல, வெற்றிகளாக இணையப் பெயர்ப்பலகை இட்டமை , புதிய சரித்திரம் படைத்தமை சம்மாந்துறை மண்ணுக்கு, 45000 வசகர்கள் இன்னும் பல இவ்வறு எமது இணையத்தளம் இவ்வாண்டில் பல முட்கள் நிறைந்த வெற்றிப் பாதயைக் கடந்துள்ளது. மலர்ந்துள்ள இவ்வாண்டிலும் 2011 இல் பல சாதனை படைப்போம் என்ற நம்பிகையோடு களமிறங்குகிறோம்.

2 comments:

  1. hamed Suhail said...
    வாழ்துக்கள்.

    உங்கள் பயணம் வெற்றிப் பயணமாக அமைய என் வாழ்த்துக்களும்
    பிரார்த்தனைகளும்.
    ஊரைச் சேர்ந்தவன் என்ற வகையிலும், ஊடகத் துறை சார்ந்தவன் என்ற வகையிலும் எனது ஆதரவு உங்களுக்கு தொடர்ந்தும் இருக்கும்.

    இனிய புது வருட நல்வாழ்த்துக்கள்

    http://aiasuhail.blogspot.com/

  2. இந்த சம்மாந்துறை இணையத் தளத்தினை உருவாக்கி
    பல சவால்களுக்கு மத்தியில் இதை நடத்திக்கொண்டு வரும் எனது அன்புத் தம்பி மார்களுக்கு எனது இதயம் கனிந்த பாராட்டுக்களை தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அதுமட்டுமல்லாமல் வீரமுனைகென்றே ஒரு இணைய தளம் உள்ள போது சம்மாந்துரைக்கென்று ஒரு தளத்தினை உருவாக்கி சரித்திரம் படைத்தது மட்டுமல்லாமல் ஊர் மானத்தையும் உலகளவில் காப்பாற்றிய உங்களுக்கு சம்மாந்துறை மக்களும், சம்மாந்துறை நிருவாக சபை உறுப்பினர்களும், உங்களது செய்திகளை நாள் தோறும் தவறாமல் பார்வையிடும் வெளி நாடுகளில் வாழும் எமது சம்மாந்துறை மக்களும் இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கு கடமைப்பட்டதுமல்லாமல் உங்களுடைய வளர்ச்சிக்கும் உதவ முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

Post a Comment

About Me

News of Sammanthurai
View my complete profile