கல்லடி பாலத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பாம்புகள் நீந்திக்கொண்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவை பாம்புகள் அல்லவென தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை ஒருவகை மீனினங்கள் என ம்டடக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பதில் இணைபாளர் அலி மெஹமது மெஹமட் காசீம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இவை அவதானிக்கப்பட்டதாகவும் இன்றைய தினமும் அவை அவதானிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
விலாங்கு மீன் என்ற இனத்தை சேர்ந்த இந்த மீன்கள் தமது வாழ்க்கையை தொடருவதற்காக ஆறுகளில் இருந்து கடலுக்கு செல்வதையே தற்போது அவதானிக்ககூடியதாக உள்ளது.
பலரும் இது பாம்புகள் எனக்கூறுவதுடன் சுனாமி வருவதற்கான எச்சரிக்கையாகவே இந்த பாம்புகள் நீந்துவதாகவும் பதற்றத்தை தோற்றுவித்திருந்தனர்.
எனினும் அனர்த்த முகாமைத்துவ மததிய நிலையம் அனர்த்தங்கள் தொடர்பாக எந்த நேரத்திலும் தகவல்களை வழங்கும் என தெரிவித்துள்ள அலி மட்டக்களப்பு வாவியில் நீந்துவதாக கூறப்படும் பாம்புகளை போன்ற மீனினத்தை கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறப்படுகின்றது.
மட்டக்களப்பில் படைஎடுத்தவை பாம்புகள் அல்ல மீன்களே(வீடியோ பதிவும் இணைக்கப்பட்டுள்ளது)
Posted by
News of Sammanthurai
Thursday, December 2, 2010
0 comments: