இந்த கல்வி ஆண்டில் 22,500 மாணவர்கள் சேர்த்துக்கொள்ள திட்டம்
முதல் தடவையாக விருந்தோம்பல் முகாமைத்துவம் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி ஆகிய பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன
பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கத் தகுதியுள்ள மாணவர்கள் மூன்று வாரங்களுக்குள் தமது விண்ணப்பங்களை முன்வைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளனர்.
விண்ணப்பங்கள் ஜனவரி 14 வரை ஏற்கப்பட உள்ளதோடு மாணவர்கள் கூடுதலான பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். இம்முறை முதல் தடவையாக விருந்தோம்பல் முகாமைத்துவம் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி ஆகிய பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதோடு இவை 2 பல்கலைக்கழகங்களில் மாத்திரமே நடத்தப்பட உள்ளன.
இதற்கு 100 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவு ள்ளனர். இம்முறை பல்கலைக்கழகத்திற்கு 22,500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளதாகவும் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுத் தலைவர் கூறினார்.
0 comments: