அம்பாறை மாவட்டத்தில் 19 உள்ளூராட்சி சபைகளுக்கு எட்டு அரசியல் கட்சிகளும் 156 சுயேச்சைக் குழுக்களும் களத்தில் குதித்துள்ளன.இங்கு மூன்று அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும் 48 சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
அம்பாறை நகர சபை, அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் 17 பிரதேச சபைகளுக்கு இத்தேர்தல் நடைபெறவுள்ளது.
காரைதீவு, திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசசபைகளில் ஈரோஸ் கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் சம்மாந்துறை பிரதேச சபைக்கான தமிழரசுக் கட்சியின் வேட்பு மனுவும் ஜனதாக் கட்சி பெரமுனயின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தேசிய காங்கிரஸ், ஈரோஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்பன இங்கு போட்டியிடுகின்றன.

0 comments: