சம்மாந்துறைப் பிரதேசத்தில் 08.01.2011ம் திகதி சனிக்கிழமை பி.ப. 6.00 மணியளவில் பெய்யத்தொடங்கிய அடை மழை 2011.01.09 அதிகாலை 6.00 மணி வரை தொடர்ந்து கொண்டே இருந்தது.
2011.01.08 நள்ளிரவு 12.30 அளவில் எமது இணையத்தள குழுவினரும், ஊடகவியலாளர் தேசமான்ய ஜலீல் ஜீயும், உஸ்வா நிறுவன பணிப்பாளர் சாமஸ்ரீ தேசகீர்த்தி ஐ.எல்.எம். முஸ்தபா அவர்களும் வெள்ளப் பாதிப்பு நிலமைகளை அவதானிக்க களம் இறங்கினர்.
முதலில் மலையடிக்கிராமம் 2, 3களில் வளவுகளுக்குள் மழைநீர் தேங்கி கிடந்தது. இதன்காரணமாக வீடுகளுக்குள் அண்ணளவாக 1 அடி உயரத்திற்கு மழைநீர் புகுந்தது. இதனால் இரவு வேளைகளில் 25 குடும்பங்கள் முற்றாகப்பாதிக்கப்பட்டு அல்-உஸ்வா மத்திரஸா கட்டிடத்தில் தஞ்சம் புகுந்தனர்.
சம்மாந்துறையின் தாழ்வான பிரதேசங்களில் வெள்ளம் நிறைந்திருத்தது, மேலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிவருகையில் ஏற்பட்ட பாதிப்புக்கள்தான் அதிகமாக காணப்பட்டது.
இரவு 2.35 மணியளவில் சுற்றிப்பார்க்கையில் சம்மாந்துறையின் தென்னம்பிள்ளைக் கிராமத்திலுள்ள 50 குடும்பங்களின் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்திருந்ததும் நள்ளிரவில் பிள்ளைகளுடன் பாதுகாப்பான இடங்களை நாடிச் சென்ற அவலநிலை அரங்கேறியது.
மேலும் செட்டிட வட்டை பிரதேசத்தை 3.05 சென்றடைந்தனர் அங்கும் 9 குடும்பங்கள் வீட்டுக்குள்ளிருந்து நீர் இறைத்துக் கொண்டிருந்தனர்.
3.30க்கு கோரக்கர் கோயில் பிரதேசத்தினை அடைந்தபோது கோயிலுக்கு அருகாமையிலிருந்த 15 வீடுகளின் முற்றங்கள், வளவுகள் நீர் நிலையாக காணப்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
4.15 அலவக்கரை பிரதேசத்தின் தாழ்வான பகுதியினூடாக செல்கையில் அனைத்து வீடுகளின் வளவுகளிலும் மழைவெள்ளம் நிறைந்திருந்தது.
4.30 மணியளவில் பெரிய பள்ளிவாசல் வீதியால் வீரமுனைக் கிராமத்தை அடைந்தோம் மிகப் பரிதாபகரமான நிகழ்வாக அதிகாலையில் சம்மாந்துறையிலுள்ள அனைத்து தண்ணீர்களும் கரைசேரும் வழியாக வீரமுனையின் தாழ்வான பகுதி காணப்பட்டது. அதிகமான மழைநீர் ஒன்று சேர்ந்து வந்ததால் எதுவும் சமாளிக்க முடியாமல் வீடுகளுக்குள் திடீரென வெள்ளம் புகுந்தது.
உயிரைக்காப்பாற்ற பிள்ளைகளை கையில எடுத்தனர் உடமைகளை மழைவெள்ளம் வீட்டுக்குள் புதுந்து அள்ளிச் சென்றது. என்ன பரிதாபம் 50க்கு மேற்பட்ட சகோதர இனக்குடும்பங்களும் 30க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களும் நேரடியாகப் பாதிக்கப்ட்டதை உணரமுடிந்தது.
காலை 5.30க்கு வீரமுனை உடங்கா - 02ம் பிரிவின் வயல் ஓரத்தில் உள்ள 35க்கு மேற்பட்ட குடும்பங்கள் நேரடி பாதிப்புக்குள்ளாகியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
காலை 5.50க்கு மையவாடிப்பிரதேசத்தின் மலையடிக்கிராமம் - 02 கிராம சேவகர் பிரிவில் இடுப்பு நிறைந்த மழை வெள்ளத்தில் நீந்திக் கொண்டு 36 குடும்பங்கள் தமது பிள்ளைகளுடன் பாதுகாப்பான இடத்தை நோக்கி தஞ்சம் புகச் சென்றனர்.
பிஞ்சுக் குழந்தைகளுடன் எதுவித உணவு, ஏனைய வசதிகளையும் எடுத்துக் கொள்ளாமல் அவசரம அவசரமாக பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்தனர்.
காலை 8.00 மணியளவில் உஸ்வா மத்ரஸா ஓர் அகதிமுகாம் 75 பேருடனும் வீரமுனை ஆர்கேஎம். வித்தியாலயத்தில் 90 பேருடன் ஓர் அகதிமுகாம். கயறுப்பள்ளி (ஸபூர் வித்தியாலயத்தில்) 85 குடும்பங்களுடன் ஓர் அகதிமுகாம் இயங்கி வருகிறது.
காலை 9.00 மணியுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது முறியாண்டி, மாவடிப்பள்ளி பிரதான பாதைகள் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளானது.
ஒவ்வொரு அகதிமுகாமையும், பாதிக்கப்ட்ட இடங்களையும் பொதுமக்களையும் காத்துக் களத்துக்குச் சென்று உதவி பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத்அலி கண்ணாளர் ஏ.எல். மஃறூப், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம். இத்ரீஸ் ஆகியோர் அடங்கிய குழு பாதிப்புகளை பார்வையிட்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட பிரிவின் கிராம சேகவர்களை உரிய துரித நடவடிக்கைகள் எடுக்குமாறு பணிப்புரை வழங்கியதுடன், சமைத்த உணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை வழங்கினார்கள்.
15000க்க மேற்பட்ட குடும்பங்கள் பெய்து வரும் தொடர்மழையால் பாதிப்புக்குற்பட்டுள்ளதாக பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர் ஏ.எம். இத்ரீஸ் தகவல் தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக் காட்டப்படவேண்டிய விடயமாகும்.
சனி இரவு சம்மாந்துறையில் பெய்த அடைமழையினால் 400க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
Posted by
News of Sammanthurai
Sunday, January 9, 2011
0 comments: