எமது ஊரில் நிறையவே பயிர்ச் செய்கை நிலங்கள் காணப்படுகின எனினும் அதை தரிசு நிலமாக மாற்றும் கூட்டமே அதிகம் காணப்படுகின்றன.இவ்வாறான ஓர் நிலைப்பாட்டில் தனது மூன்றாவது மொட்டை மாடியில் பயிர் செய்து புதிய பயிர்ப் பேதம் உருவாக்கிய வரலாறு உண்டு.இது உங்களுக்கு தெரியுமா?அதுவே உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைகின்றோம்.சம்மாந்துறை விளினியடிச் சந்தியில் ஓய்வு பெற்ற முன்னால் பல-நோக்குக் கூட்டுறவுச் சங்க சபைச் செயலாளர் திரு.றசீத் அவர்களின் பொழுது போக்கு முயற்ச்சியே ஆகும்.இவர் குடியிருப்பது பிரதான வீதியில் ஆகும்.எனவே இவர் பயிர் செய்வதற்கு ஓர் அங்குல இடம் காணப்படவில்லை.இருந்தும் மன்முன்டால் இடமுண்டு எனும் பழமொழிக்கு உயிப்பூட்டியுள்ளார்.இவர் தனது கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஓர் அரையடிக்கு மண்ணிட்டு தனது பயிர்ச் செய்கையை மேற்க் கொண்டார்.தற்பொழுது அது ஓர் பல் நாட்டு மரக்கறிகளின் இராச்சியமாக மாறியுள்ளது.அவர் கூறுகையில்-
தான் சென்ற வருடம் இத் தோட்டத்தைச் செய்ய ஆரம்பித்ததாகவும் தற்பொழுது தனது பயிர்ச் செய்கையில் பூரண வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார்.மேலும் இவர் கூறுகையில் தான் ஓர் புதிய இன வெண்டி ஒன்றைக் கலப்புச் செய்து உருவாக்கியுள்ளதாகவும்,அது சிறிய பருவத்திலேயே காய்க்கக் கூடியது எனவும் அத்துடன் சிறந்த நோய் எதிர்ப்புள்ள வீரியமான இனம் இது எனக் குறிப்பிட்டார்.இவ்வாறான திறமையுள்ள எத்தனையோ திறமைசாலிகள் எமது ஊரிலே காணப்பட்ட பொழுதும் அவர்களுடைய திறமைகள் மழுங்கடிக்கப் படுகின்றன.எனவே இவர்களுடைய திறமைகளை வெளிக் கொண்டு வர எமது செய்திப் பிரிவு தொடர்ச்சியாக உழைக்கும் என்பதில் ஐயமில்லை.எனவே இவ்வாறான திறமைகளை நீங்களும் இனங்காட்டலாம்.

2 comments:

  1. Good News Guys

  2. வாழ்க. முன் உதாரணங்களுடன் எது செய்தாலும் அது பாராட்டப் படவேண்டியது.

Post a Comment

About Me

News of Sammanthurai
View my complete profile