கிழக்கில் பெய்துவரும் அடைமழையினால் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு 45 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தெரிவித்துள்ளார்.நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 63 ஆவது தேசிய சுதந்திரதின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் சம்மாந்துறை பிரதேசத்தின் முக்கிய ஜீவனோபாய தொழிலாகக் காணப்படும் விவசாயத்துறை முற்றாக சேதமடைந்துள்ளது. இதுவொரு நீண்டகால பொருளாதார தாக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று சுயதொழில் துறைகளும் முற்றாகப் பாதிப்படைந்துள்ளது.
சம்மாந்துறை பிரதேசத்தில் 384 வீடுகள் முற்றாகவும் 1180 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. இதற்கான செலவு மதிப்பீடாக 35.65 மில்லியன் ரூபாவாகவும் இதுவரை கிடைத்த தகவலின்படி 22352 ஏக்கர் விவசாயக் காணிகள் முற்றாக சேதமடைந்துள்ளது. சேத விபரங்கள் 137 மில்லியன் ரூபாவாகவும் 2700 சுயதொழில் முயற்சியாளர் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. நன்னீர் மீன்பிடித் தொழில் ரீதியாக 23.5 மில்லியன் ரூபாவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதேசமயம் சொத்துகள் பாதிப்பு ஆர்.டி.டி.வீதிகள்,நீர்ப்பாசன பிரிவு, வீதிகள்,பாடசாலைகள்,மதரசாக்கள் ஏனைய பொதுக்கட்டிடங்கள் சேதப்பட்டதனால் 255 மில்லியன் ரூபாவும் பிரதேசசபைக்குட்பட்ட சொத்துகள் 38 மில்லியன் ரூபாவுமாக 489 மில்லியன் ரூபா சம்மாந்துறைப் பிரதேசத்தில் மாத்திரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமடையுமானால் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

About Me

News of Sammanthurai
View my complete profile