சிறிலங்கா நாடாளுமன்றத்தில், 18 வது அரசியலமைப்பு திருத்த விவாதம் இன்று ஆரம்பமாகியுள்ளது என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்புத் தெரிவித்து வரும் பிரதான எதிர்கட்சியான ஐ.தே.கட்சியி உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.
இந்தத் திருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும், உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மக்கள் அபிப்பிராயம் கோரி சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டு வரும் நிலையில், சிறிலங்கா உச்ச நீதிமன்றம், மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில், சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை என்றிருக்கிறது.
சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மை பலம் பெற்று, புதிய அரசு அமைந்த போதும், ஆளும் கட்சிக்கு 144 உறுப்பினர்களே உள்ளனர். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பெற, 150 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக இருந்தது.
இந்நிலையில் அன்மையில் அரசுக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ள, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேருடன், ஐதேகட்சி உறுப்பினர்கள் 6 பேர், அரசுடன் இணைந்துள்ள ஜனநாயகக் கட்சியின் பிரபா கணேசன், தொழிலாளர் தேசிய முன்னணியின் திகாம்பரம், அம்பாறை மாவட்ட ததேகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பியசேன ஆகியோர், அரசியலமைப்புத் திருத்ததிற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில், 18 வது அரசியலமைப்பு திருத்த விவாதம் ஆரம்பமாகியது
Posted by
News of Sammanthurai
Wednesday, September 8, 2010
0 comments: