பன்றிக்காய்ச்சல் நோய்க்கு எதிராக தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகள் சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.
பன்றிக்காய்ச்சல் நோய்க்காரணியான ஏ.எச்1.என்1 வைரஸ் தொற்றுநோய் நாட்டில் தீவிரமடைந்ததையடுத்து நாடளாவிய ரீதியில் நோய்த்தொற்றினைத்தடுக்கும் வகையில் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் பன்றிக்காய்ச்சல் நோய்த்தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம் பெற்று வருகின்றன. இதற்கு தேவையான மருந்து வகைகள் சுகாதார அமைச்சின் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதன் பிரகாரம் சுகாதார அமைச்சின் மூலமாக விநியோகிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதற்கட்டமாக அரசசேவை அலுவலகங்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் ஆண்டில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் பாடசாலை மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பன்றிக்காய்ச்சல் நோய்க்கு எதிராக தடுப்பு மருந்து பத்துவயதிற்கு மேற்பட்டோர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் இதயவருத்தம் மற்றும் உள்ளவர்களுக்கு இத்தடுப்பு மருந்து வழங்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments: