வடகீழ் பருவப்பெயர்சிசி மழையால் அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்த பிரதேசங்களில் குடியிருந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். முக்கியமாக சுனாமி யுத்தகாரனமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறிய குடும்பங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு மீண்டும் உறவினர்களின் வீடுகளில் தஞசமடைந்துள்ளனர்.
மாவட்டத்தின் கரையோரப்பிரதேசங்களில் சீரான வடிகால் அமைப்புக்கள் இல்லாததிலும் ஏற்கனவே தாழ்ந்த பிரதேசங்களாக இருந்த பகுதிகளில் மணல் நிரப்பி காரியாலயங்களும் வீடுகளும், வயல் நிலங்களுமாக மாற்றம் செய்யப்பட்டதுமே வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணமென சுட்டிக்காட்டப்படுகின்றது. மழையோடு கடல் கொந்தழிப்புமாக இருப்பதனால் கடந்த சில தினங்களாக ஆழ்கடல் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
நன்னீர் நிலயங்களில் சல்பீனியா பூண்டுகள் படர்ந்துள்ளமையால் நன்னீர் மீணவர்களும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன் உணவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கருவாடுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் நத்தார் நள்ளிரவு திருப்பலி ஆராதனையிலும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளமுடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்துகளின் திரும்வெம்பாவை ஊர்வலம் நத்தார் சுரேல் கீதம் போன்ற நிகழ்வுகள் கூட பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பிரதான வீதிகளில் அமைக்கப்படும் பாலங்களில் திருத்த வேலைகள் நிருத்தப்பட்டதால் சில இடங்களில் போக்கவரத்தும் தடைப்பட்டுள்ளது.
மலை நாட்டுப்பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருந்த காய்கறிகளும் மழையினால் வராததால் மக்களின் அன்றாட வேளை உணவுக்காக காய்கறிகளையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
அரிசி,தேங்காய்,கருவாடு போன்ற அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலை வாசியும் உயர்ந்துள்ளதால் மேலும் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
(மீநோடைக்கட்டு நிருபர்: ஏ.எல்.எச்.முகம்மட்)வடகீழ் பருவப்பெயர்சிசி மழையால் அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்த பிரதேசங்களில் குடியிருந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். முக்கியமாக சுனாமி யுத்தகாரனமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறிய குடும்பங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு மீண்டும் உறவினர்களின் வீடுகளில் தஞசமடைந்துள்ளனர்.
மாவட்டத்தின் கரையோரப்பிரதேசங்களில் சீரான வடிகால் அமைப்புக்கள் இல்லாததிலும் ஏற்கனவே தாழ்ந்த பிரதேசங்களாக இருந்த பகுதிகளில் மணல் நிரப்பி காரியாலயங்களும் வீடுகளும், வயல் நிலங்களுமாக மாற்றம் செய்யப்பட்டதுமே வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணமென சுட்டிக்காட்டப்படுகின்றது. மழையோடு கடல் கொந்தழிப்புமாக இருப்பதனால் கடந்த சில தினங்களாக ஆழ்கடல் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
நன்னீர் நிலயங்களில் சல்பீனியா பூண்டுகள் படர்ந்துள்ளமையால் நன்னீர் மீணவர்களும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன் உணவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கருவாடுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் நத்தார் நள்ளிரவு திருப்பலி ஆராதனையிலும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளமுடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே இந்துகளின் திரும்வெம்பாவை ஊர்வலம் நத்தார் சுரேல் கீதம் போன்ற நிகழ்வுகள் கூட பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

0 comments: